டில்லி

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச் வசந்தகுமார் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.   தற்போது நடந்த மக்களவை தேர்தலில் வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால் அவர் நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  நாங்குநேரி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கே கே ரமேஷ் என்பவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு காரணம் வசந்தகுமார் என்பதால் தேர்தல் செலவுகளை வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரப்பட்டது.  இண்டஹ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.  இதன் மூலம் தேர்தல் செலவுகளை வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.