மருத்துவப் பட்ட மேற்படிப்பில் உள் இட ஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி

ருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பான எம் டி,  எம் எஸ் போன்ற படிபுகளில் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் பட்டதாரி மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.    இந்த வழக்கு  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு அந்த அமரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.   அதனால் இந்த வருடம் மட்டும் 50% உள் ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.   மேலும் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு முடியும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறி உள்ளது