சசிகலா – இளவரசி – சுதாகரன்

டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்புன  4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் ஆகியவற்றை உறுதி செய்தது.

மேலும் உடனடியாக பெங்களூர் சிறையில் சரணடையவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்,   தனக்கு உடல் நலமில்லை என்றும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது இருப்பதால், கோர்ட்டில் சரணடைய 4 வார கால அவகாசம் தேவை என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் சசிகலாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். உடனே சரணடைய உத்தரவிட்டனர்.