டில்லி

கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3 ஆம் தேதி வரௌ எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.   இதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.  இதை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறியீட்டு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தார்.

கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளித்தது.   ஆனால் மே மாதம் 3 ஆம் தேதி வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது.    இதையொட்டி தமிழக ஆசு புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.   இந்த மனுவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தலாமா என அரசு விளக்கம் கேட்டிருந்தது

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை நடத்தினாலும் மே 3 வரை முடிவுகளை வெளியிட முடியாது எனவும் அதனால் வாக்கு எண்ணிக்கையை மே மாதம் 3 ஆம் தேதி வரை நடத்த வேண்டாம் எனக் கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.