டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின் முடிவு எடுக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கம்போல் நீதிபதிகள் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பின் காரணமாக இப்போது அதற்கு சாத்தியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயினும், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழு ஆலோசனை மேற்கொண்டு 4 வாரங்களில் அதன் முடிவை அறிவிக்கும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்து இருக்கிறது.