டில்லி

ணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட படத்தை வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது பல திரைப்படங்கள் வெளியாகும் முன்பே சர்ச்சை உண்டாகி வருகின்றன.    சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைப்படமும் அது போல கடும் சர்ச்சைக்கு உண்டாகி அதன் பின்னர் தணிக்கை செய்யப்பட்டு வெளியானது தெரிந்ததே.    அவ்வகையில் நானக்‌ஷா ஃபகிர் என்னும் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

சிக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் நானக்‌ஷா ஃபகிர்.   பிரபல இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி உள்ள இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்துக்கு பல சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இந்தப் படம் வெளியாவதற்கு சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தடை விதித்துள்ளது.   இந்தியாவில் எங்கும் இந்தப் படம் வெளியிடக் கூடாது என அறிக்கை விடுத்துள்ளது.   இதை எதிர்த்து படக் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், “நானக்‌ஷா ஃபகிர் திரைப்படம் வெளியிடுவதில் எந்தத் தடையும் கிடையாது.   சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உட்பட எந்த அமைப்பும் இந்தப் படம் வெளியிடுவதை தடை செய்யக் கூடாது.   தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தடுக்கு எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை இல்லை.” எனக் கூறி உள்ளது.