கமல்நாத்தின் ’’நட்சத்திர பேச்சாளர்’’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த  உச்சநீதிமன்றம் ..

 

புதுடெல்லி :

த்தியபிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது..

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கமல்நாத்தின் ‘நட்சத்திர பேச்சாளர்’ அந்தஸ்தை’ ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 30 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது., இதனை எதிர்த்து கமல்நாத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது” என்று தனது மனுவில் கூறி இருந்த கமல்நாத் “இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்;” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கமல்நாத்தின் ஸ்டார் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?” என கேள்வி எழுப்பிய் உச்சநீதி மன்ற அமர்வு, தேர்தல் ஆனைய உத்தரவை நிறுத்தி வைத்தது..

– பா.பாரதி