டில்லி:

த்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, வட மாநிலங்களில் பரவி வரும் எஸ்சி எஸ்டி சட்ட திருத்த பிரச்சினை, பிஎன்பி மோசடி, விவசாயிகள் பிரச்சினை  போன்றவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராடி  வருகின்றன.

இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, எதிர்கட்சியினருடன்  ராகுல்காந்தி, சோனியா காந்தி கலந்துகொண்டனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காவிரி பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் காராணமாக நாடாளுமன்றம் முடங்கி வரும் நிலையில், காவிரி பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்காத காங்கிரஸ் கட்சி, இன்று மற்ற கட்சியினருடன் இணைந்து போராடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.