மற்ற மாநிலங்களின் எஸ்சி/எஸ்டி பட்டியலில் இல்லாத ஜாதியினர் இடஒதுக்கீடு கோர முடியாது….உச்சநீதிமன்றம்

டில்லி:

மற்ற மாநிலங்களின் எஸ்சி/எஸ்டி பட்டியலில் இடம்பெறாத ஜாதியினர் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி என்று பட்டியலிடப்பட்ட ஜாதியினருக்கு அடுத்த மாநிலங்களிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இ ந்த வழக்கை விசாரித்தது.

நீதிபதிகள் ரமணா, பானுமதி, சந்தானகவுடர், நசீர் ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர். நீதிபதிகள் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,‘‘ஒரு மாநிலத்தில் ஒரு நபர் எஸ்சி/எஸ்டி என்று குறிப்பிடப்பட்டிருது, மற்ற மாநிலங்களில் அந்த ஜாதி எஸ்சி/எஸ்டி பட்டியலில் வரவில்லை என்றால் இட ஒதுக்கீடு கோர முடியாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் மத்திய இடஒதுக்கீடு கொள்கை தான் பின்பற்ற வேண்டும் என்று 4 நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி பானுமதி மட்டும் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். பெரும்பான்மையான நீதிபதிகள் இதை ஏற்றுக் கொண்டதால் டில்லியில் மத்திய இடஒதுக்கீடு கொள்கை பொருந்தம் என்று தெரிவிக்கப்பட்டது.