டெல்லி:

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டிப்பு, குடியுரிமை மசோதா உள்பட பல மசோதாக்களுக்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இன்று காலை  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இஇந்த கூட்டத்தில், குடியுரிமை சட்ட திருத்த பதிவேடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது அன்படி, வங்கதேசம், பாக்., ஆப்கன் போன்ற நாடுகளில் துன்புறுத்தல் காரணமாக இந்தியா வந்துள்ள இந்து, சீககியர், பவுத்த அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா வழிவகை செய்கிறது.

அதுபோல லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை அடுத்த 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்தியஅரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஏற்கனவே  காங்கிரஸ் உள்படஎதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.