Random image

டில்லி : இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளித்த உச்சநீதிமன்றம்

டில்லி

ருசக்கர வாகனம் குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய முடிவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

டில்லியில் மாசுபடுவது கட்டுக்கடங்காமல் உள்ளது.    இந்த மாசு அதிகமாக நகரில் ஓடும் வாகனங்களால் ஏற்படுபவை ஆகும்.   இதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்தது.   அதை ஒட்டி சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி டில்லி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்லும் வாகனங்களுக்கு பல கட்டுப்பாடுகளை தீர்ப்பாயம் விதித்தது.

ஒவ்வொரு வாகனத்துக்கும் பதிவு எண் தரப்படுகின்றன.   அந்தப் பதிவு எண்களின் படி தீர்ப்பாயம் இருவகை படுத்தியது.   ஒற்றைப் படை பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் ஒரு நாளும் இரட்டைப்படை பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் அடுத்த நாளும் செல்ல அனுமதிக்கப்படும் என தீர்ப்பாயம் கூறியது.   இந்த நடைமுறைக்கு மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

இதை ஒட்டி டில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.  அந்த வழக்கில் ”தீர்ப்பாயத்தின் முடிவ் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.   நகரில் இரு சக்கர வாகனங்க்ளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 68 லட்சம் பேர் தங்கள் வாகனங்களை உபயோகிக்க இயலாமல் போகும்.    அத்தனை பேர் பயணிக்கும் அளவுக்கு அரசு பேருந்துகள் வசதி இல்லை.  எனவே  இந்த பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையில் இருந்து இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என அரசு கேட்டுக் கொண்டது.

அரசின் கோரிக்கையை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பாயத்தின் ஆணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.   இது டில்லியில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.