எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றம்

எஸ்.வி.சேகர்

சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், ஜூன் 1ந்தேதி வரை  எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

எஸ்.சேகரை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், எஸ்.வி.சேகர் முன்ஜாமின்  கோரி  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எஸ்..வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அவரை  வரும் ஜூன் 1ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும்  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.