டில்லி

கராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அளித்துள்ள அங்கன்வாடி தொடர்பான ஒப்பந்தங்களை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் மாநிலம் எங்கும் பல அங்கன்வாடி எனப்படும் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு தேவையான சத்து மாவு உள்ளிட்ட பொருட்கள டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்து இந்தத் துறையின் அமைச்சர் பங்கஜா முண்டே கொள்முதல் செய்து வருகிறார்.

இதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 2016 ஆம் வருடம் அளீக்கப்பட்டது. இந்த டெண்டர் மூலம் ஐந்து வருடங்களுக்கான சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த ஒப்பந்தம் மேலும் இரு வருடங்களுக்கு நீட்டிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.6300 கோடி ஆகும்.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வைஷோராணி மகிதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ளித்தார். அந்த மனுவில் சத்து மாவு தாயரிக்கும் தொழில்நுட்பத்தை அவர் எதிர்த்தார். அத்துடன் டெண்டர் அளிக்கும் நிறுவனத்தின் வருட வருமானம் அதிக அளவில் உயர்த்தப்பட்டிருந்ததால் சிறு தொழில் நிறுவனங்களும் மகளிர் சுய உதவி குழுக்களும் பங்கு கொள்ள முடியாமல் போனதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தின்நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோரின் அமர்வு விசாரித்து வ்ந்தது. இதை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் இந்த ஒப்பந்தட்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் இந்த டெண்டர் விவகாரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அணுகாதது குறித்து விளக்கம் அளிக்க மகாராஷ்டிர மாநில அமைச்சர் பங்கஜாவுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இரண்டொரு நாட்கள் முன்பு  மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே மீது மொபைல் கொள்முதல் செய்ததில் ரூ.106 கோடி ஊழல் நடந்துள்ளதாக அவருடைய ஒன்று விட்ட சகோதரரே புகார் அளித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தற்போது உச்சநீதிமன்றம் அவர் துறையில் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இது மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளதாக அம்மாநில பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.