டில்லி அரசு – மத்திய அரசு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டில்லி
டில்லி அரசுக்கும் மத்திய அரசுஇகும் இடையேயான அதிகார மோதல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
டில்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் டில்லி சட்டப்பேரவையை விட துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதனால் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. அதிலும் ஆம் ஆத்மி கட்சி பதவி ஏற்றதில் இருந்து இந்த மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதை ஒட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியால் தொடுக்கப்பட்ட வழக்கில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை அளித்தது.
இந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கன்வில்கர், சிக்ரி , சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள், ப சிதம்பரம், கோபால் சுப்ரமணியன், ராஜீவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதாடினார்கள். மத்திய அரசின் சார்பாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் மனிந்தர் சிங் வாதாடினார்.
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்கும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.