ஓரினச் சேர்க்கை வழக்கு : மத்திய அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு

டில்லி

த்திய அரசு விடுத்த வேண்டுகோளை நிராகரித்து ஓரினச் சேர்க்கை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடங்க உள்ளது.

 

ஓரினச் சேர்க்கை இந்திய தண்டனை சட்டம் 377 இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.   இவ்வாறு வயது வந்த இரு ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த் 2009 ஆம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பு அளித்தது.    இந்த தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.   இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.   அப்போது டில்லி உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை ரத்து செய்தது.   அத்துடன் ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் என கடந்த 2013ல் தீர்ப்பளித்தது.    இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுவை விசாரிக்க அமர்வு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.   அத்துடன் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசிடம் கூறியது.   இந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்க உள்ளது.  அரசு தர்ப்பில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கோரியும் அதுவரை வழக்கு விசாரணையை தொடங்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடப்பட்டது.

இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்துள்ளார்.  மேலும் வழக்கு விசரணை இன்று முதல் தொடங்கும் எனவும் கூறி உள்ளார்.  அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், நாரிமன், கன்வில்கர், சந்திரசூட்,  இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முதல் வழக்கு விசாரணையை தொடங்க உள்ளது.