Random image

பூரி ஜெகநாதர் கோவிலுக்குள் மற்ற மதத்தினரையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

டில்லி:

ஜெகநாதர் ஆலயத்திற்குள்  இந்து அல்லாத மற்ற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் வலியுறுத்தி உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஜெகநாதர் ஆலயம்  ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது.  இந்த ஆலயத்தில் மூலவர்களாக  ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகின்றனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே செல்லமுடியும் என்பது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. மாற்று மததத்தினர் கோவிலுக்குள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளிப்பது கிடையாது.

இது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், இந்து மதம் எந்தவொரு மதத்தினரின் விசுவாசத்தையும், நம்பிகையையும் அழிக்காது. இது பல நூற்றாண்டுகளாக நாம் காண்பதாகும்.

கோவில் நிர்வாகம், ஆட்டை கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய மரியாதையை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கும் அனுமதி அளிக்க வேண் டும். கோவில் நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

பகவத் கீதையில் அர்ஜுனனைப் பற்றி கிருஷ்ணர் கூறுவது குறித்தும் எடுத்துரைத்த நீதிபதி கள், மற்ற மதங்களை சேர்ந்த மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், அசோக் பூஷன் அடங்கிய 2 நபர் அமர்வு இந்த கருத்தை  தெரிவித்து உள்ளது.

ற்கனவே இதுபோன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒரு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பட்டது. மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும் இதுபோன்ற ஒரு அவமதிப்பு நடைபெற்றது.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்து அல்லாதவரை திருமணம் செய்ததாக கூறி இந்து கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.