கத்துவா சிறுமி பலாத்கார வழக்கு : பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் வழக்கறிஞரை தடுத்தவர்கள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா பகுதியில் ஒரு எட்டு வயது இஸ்லாமியச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.    அந்த வழக்கில்  கைதானோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் பதிய குற்றவியல் துறை முயன்றது.   ஆனால் கத்துவா மாவட்ட பார் கவுன்சிலில் உள்ள பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் அதை தடுத்துள்ளனர்.  பெரும் சிரமத்துக்கிடையே வழக்கு பதியப்பட்டது.

பாதிக்கப்பட்டு இறந்து  போன சிறுமியின் குடும்பத்தினருக்காக ஒரு பெண் வழக்கறிஞர் வாதாட முன் வந்துள்ளார்.   அவரையும் அந்த வழக்கில் வாதாடக் கூடாது என கத்துவா மாவட்ட பார் கவுன்சில் தடுத்துள்ளது.

இந்த விவகாரத்தை அறிந்த உச்சநீதிமன்றம் பார்கவுன்சிலின் இந்த செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.    இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.