டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தலாம்: உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி

டில்லி:

லைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டி ருந்த தடையை உச்சநீதி மன்றம் நீக்கியது. இதன் காரணமாக  டில்லியில் போராட்டம் நடத்த உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது.

டில்லியின் மையப்பகுதியான ஜந்தர் மந்தர் பகுதியில் மத்தியஅரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தமிழக விவசாயிகள் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதும் இந்த பகுதியில்தான்.

இந்த பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வரு கின்றனர்  என்றும், ஜந்தர் மந்தர் பகுதியில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதிக்கக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று , டில்லியை சேர்ந்த வர்கள் சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில்,  தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி, ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் தடை விதிப்பதுடன், அந்த பகுதியில் ஒலிபெருக்கி போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கடந்த (2017)ம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி டில்லி மாநில அரசுக்கு  உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, பலர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  தடையை நீக்கி உத்தரவிட்டனர்.  மேலும் ஜந்தர் மந்தர், இந்தியா கேட் பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும்  உத்தரவிட்டனர்.

மேலும், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசு ஆகியவை  இரண்டு வாரத்திற்குள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து  தெரிவிக்க வேண்டும் என்று  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.