டில்லி

ருவருக்கு அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் செய்தியை சாட்சியமாக கொள்ளலாமா என்பது குறித்து உச்சநீதி மன்றம் ஆய்வு செய்ய உள்ளது.

அமுலாக்க இயக்குனரகம் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் மொயின் குரேஷி மேல் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றத்தின் கீழ் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை டில்லி உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் நஜ்மி வாசிரி ஆகியோரின் அமர்வின் கீழ் நடை பெறுகிறது.

வழக்கில், குரேஷியின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஹண்டூ, தனது கட்சிக்காரர் எந்த ஒரு ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  அரசின் அமுலாக்கத் துறை வழக்கறிஞர் அதற்கு அவரது பிளாக் பெரி மொபைல் மூலம் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட குறுந்தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  வழக்கறிஞர் ஹண்டூ,  சமீபத்திய உச்ச நீதி மன்ற உத்தரவின் கீழ் ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது என தீர்ப்பளித்ததை சுட்டிக் காட்டினார்.

அதையொட்டி உயர் நீதி மன்றம், கிரிமினல் வழக்கில் இது போன்ற குறும் செய்திகளை சாட்சியமாக எடுத்துக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது ஆகுமா எனவும் அந்த குறும் தகவல்களை சாட்சியமாக கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.   அதன்படி உச்ச நீதி மன்றம் இதை ஆய்ந்து பதில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.