டில்லி

ரசு அமைத்துள்ள பிரதம மந்திரி நியாய விலை மருந்துக் கடைகளில் ஊழல் நிகழ்ந்துளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகள்  அதிக விலையில் விற்பதை தடுக்க 3200 பிரதம மந்திரி நியாவிலை மருந்துக் கடைகளை மத்திய அரசு திறந்துள்ளது.    இந்தக் கடைகளில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் எனவும் இதனால் பல தரப்பட்ட மக்களும் பயனடைவார்கள் என சொல்லப்பட்டது.   இந்த கடைகள்  இந்திய மருந்துகள் சம்மேளனம் என்னும் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகள் தணிக்கை செய்யப்பட்டு அதன் முடிவுகளை தணிக்கைத் துறை அறிவித்துள்ளது.   அந்த முடிவுகளில், “ஒரு சில மருந்துகள் அதிக பட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் விற்கப்பட்டுள்ளன.   இதனால் இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கான பயனே மக்களுக்கு கிட்டவில்லை.  இந்த சம்மேளனத்தின் நிதி ஆதாரங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளன.    நோயாளிகளுக்கு ஊறு விளவிக்கும் என்பதால் தடை செய்யப்பட வேண்டிய மருந்துகளை இந்த அமைப்பு வாங்கி விற்பனை செய்துள்ளது.

அத்துடன் பஞ்சாப் மாநிலத்தில் பல தனியாருக்கு இது போல கடைகள் நடத்த அமைப்பு அனுமதி அளித்துள்ளது.   இதற்காக அங்கீகரிக்கப் படாத பல நிதி உதவிகளை அளித்துள்ளது.    இந்த அமைப்பின் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட படிகளும் பயணச் செலவுகளும் விதிகளுக்கு புறம்பாக அனுமதிக்கப் பட்டுள்ளன.    மேலும் மூத்த தணிக்கை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு தணிக்கை ஒன்றை நடத்தினால் இன்னும் பல முறைகேடுகள் தெரிய வரும்”  என குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறிஹ்ட்து இந்திய மருந்துகள் சம்மேளனத்தின் தலைமை அதிகாரி பிப்லப் சட்டார்ஜியிடம் கேட்ட போது அவர் பயணத்தில் இருப்பதாகவும் அதனால் எந்த ஒரு கருத்தும் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.