ஆவின் பண்ணையில் செக் மோசடி: அரசுக்கு பல லட்சம் இழப்பு

சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்த முகவர்கள் சிலர், அதற்கான தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சோழிங்கநல்லுாரில் இயங்கிவரும்  ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும், 3.4 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டும்,  30 ஆயிரம் லிட்டர் பால் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் பாக்கெட்டுகளை, முகவர்கள் வாங்கிச் சென்று, கடைகளுக்கு விநி யோகம் செய்து வருகிறார்கள்.

அரசுக்கு, 2.25 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினால், முகவராக ஆவின் நிர்வாகம் அங்கீகாரம் வழங்குகிறது.

Tamil_DailyNews_6189190149308

தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பால் பாக்கெட்டுகளை வாங்கிச் செல்லும் முகவர்கள்  அத்தொகைக்கான காசோலை கொடுப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன், சில முகவர்கள் கொடுத்த காசோலைகள், பணமின்றி திரும்பின. முகவர்களின் வங்கிக்கணக்கில் பணமில்லாத நிலையிலும், காசோலை வழங்கிய சிலருக்கு, விதிமுறைகளை மீறி, பால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.  இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய்  இழப்பு ஏற்பட்டது.

ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்,  மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து

மோசடிக்கு துணை போன  அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும்  சம்பந்தப்பட்ட முகவர்களிடம் இருந்து முழுத்தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை.