கரோனா வைரஸால் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் மாற்றம்….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படம் ‘அண்ணாத்த’ . இந்த படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஸ்ரீமன், விஸ்வாந்த் ஆகியோர் நடிக்கின்றனர் மேலும் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்தது . அடுத்தகட்டப் படப்பிடிப்பு வட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் படமாக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்திகளால் ஹைதராபாத்திலேயே காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளனர்.