வேலூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து! 20 பேரின் நிலை?

வேலூர்:

வேலூர் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த பள்ளி வாளகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்ற வரும் வேளையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிப்பணிகளில் ஈடுபட்டு வந்த கூலித்தொழிலாளிகள் 20 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.