காட்பாடியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது!! 20 பேர் புதைந்தனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கலில் தனியார் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பள்ளிக் கட்டிடம் இன்று திடீர் என இடிந்து விழுந்தது. இந்த் இடிபாடுகளுக்குள் 20க்கும் அதிகானவர்கள் சிக்கி கொண்டனர்.

உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.