செங்கல்பட்டு : மழையால் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்தது!

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே பள்ளிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.   சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது  இதை ஒட்டி இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள சிற்றூர் ஓமலூர்.   இங்கு ஒரு அரசுப்பள்ளி உள்ளது.  மூன்று அடுக்குகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் இந்தப் பள்ளி இயங்கி வருகின்றது.  இந்த பள்ளியின் கட்டிடம் கட்டி 30ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது.  இந்தப் பள்ளியின் மூன்று அடுக்குகளில் இரண்டு அடுக்குகள் இன்று இடிந்து விழுந்துள்ளன.

இன்று பள்ளி விடுமுறை என்பதால் யாரும் கட்டிடத்தினுள் இல்லை.  மேலும் மழையின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் அடியோடு இல்லை.  அதனால் எந்த ஒரு உயிர்சேதமோ,  காயப் படுதலோ நிகழவில்லை என தெரிய வந்துள்ளது.   இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.