Random image

விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் தவழும் போராட்டம்

ர்மசாலா

மாசல பிரதேசம் தர்மசாலாவில் 26 குழந்தைகள் இறந்த பள்ளி பேருந்து விபத்து வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பெற்றோர்கள் தவழும் போராட்டம் நிகழ்த்தி உள்ளனர்.

இமாச்சல் பிரதேசம் தர்மசாலா பகுதியில் வஜிர் ராம் சிங் பதானியா என்னும் ஆரம்பப் பள்ளி உள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி அன்று மாலை பள்ளி முடிந்து பள்ளிப் பேருந்தில் 45 குழந்தைகள் வீடு திரும்பினர்கள்.   இந்த பேருந்து திடீரென சாலையில் இருந்து விலகி ஓடி ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த 26 மாணவர்கள் உயிரிழந்தனர்.  அத்துடன் பேருந்தின் ஓட்டுனரும் மராணம் அடைந்துள்ளார்.   மேலும் இரு ஆசிரியைகளும் உயிரிழந்தனர்.   இந்த விபத்து அப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இது குறித்து அரசு அதிகம் கவனம் செலுத்தவில்லை என  பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.  அதை ஒட்டி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மரணம் அடைந்த் 26 குழந்தைகளின்  பெற்றோர்களும் தர்மசாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுமையான போராட்டம் ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.    தங்கள் எதிர்ப்பை காட்ட அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தினுள் தவழ்ந்து சென்றுள்ளனர்.   ஆட்சியர் பெற்றோர்களின் கோரிக்கையை கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.