நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் நிரந்தர சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 20ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்ததால் மாணவர்களின் போரட்டம் மாநிலம் முழுவதும் பரவி வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக கல்வி துறை அறிவித்துள்ளது.