கோவை:
சா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித  முறையான அனுமதியும் பெறவில்லை என்றும்,  அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்  தெரிவித்துள்ளது. .
பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும், ஈசா சமஸ்கிருத பள்ளியில், குழந்தைகளை கொடுமைப்படுகின்றனர்,  அவர்களுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவதில்லை என்பன உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்த புகாரின் பேரில், நேற்று குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாகிகள், ஈசா யோகா மையத்தை ஆய்வு செய்தனர்.
Untitled-2
பிறகு  அங்கு நடத்தப்படும் சம்ஸ்கிருத பள்ளியையும் ஆய்வு செய்தனர். ஆய்வில், பள்ளிக்கு முறையாக அனுமதி பெறவில்லை, மாணவர்களுக்கான அடிப்படை கல்வியளிக்கப்படுவதில்லை என்பன உள்ளிட்ட பல முறைகேடுகள் தெரியவந்துள்ளன.
ஈசா பள்ளியை ஆய்வு செய்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜெயந்தி ராணி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெறப்பட்ட புகார் அடிப்படையில் ஈசா யோக மையத்திற்கு சென்று ஆய்வு செய்தோம்.  அங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி முறையாக இல்லை. கலை தொடர்பான கல்வி மட்டுமே உள்ளது. சமஸ்கிருத பள்ளி நடத்துவதற்கான எந்த வித ஆவணங்களும் அவர்கள் சமர்பிக்கவில்லை.  இது தொடர்பாக  பள்ளி நிர்வாகிகள் ஆஜராக ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பட்டது. ஆனால் ஈஷா யோக மையத்திலிருந்து இரண்டு பக்தர்கள் மட்டுமே வந்து கடிதம் ஒன்றை அளித்தனர். மேலும் ஆவணங்கள் எதுவும் சமர்பிக்காததால், இன்று நேரில் வந்து ஆய்வு செய்தோம். இது குறித்து விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.