ராஞ்சி:

ரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தும்காவில் உள்ள தொலைதூர கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் சா. தங்கள் பள்ளியில் படிக்கும் 184 மாணவர்கள், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில், தினமும் மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வருகிறார்.

இங்குள்ள பெரும்பாலான கிராம விவசாயிகள், தினசரி கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனாலே அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற நோக்கில் மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கும் பணிகளை இவர் செய்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாணவர்கள் மதிய உணவின் பயனை இழக்கக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு மாநில மனிதவளத் துறை சமீபத்தில் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. உணவு கையேட்டின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அரிசியை மாணவர்களின் வீட்டு வாசல்களில் வழங்கப்பட வேண்டும்.

உத்தரவுகளை மீறி, பல அரசு பள்ளிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை அழைத்து சமூக இடைவெளியை மீறி வருகின்றனர். ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் அரசாங்க உத்தரவைப் பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும் போது இது ஒரு கடினமான வேலை என்று கூறியுள்ளனர்.

ஆனால் சாஹ் கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு மாணவருக்கும் முட்டை / பழம் மற்றும் சமையல் செலவுக்கு தேவையான பணத்துடன் ரேஷனை விநியோகித்து வருகிறார்,

அவர் காலை 7 மணியளவில் வண்டியுடன் தனது பள்ளியை விட்டு வெளியேறி, ஒவ்வொரு மாணவரின் வீட்டு வாசலிலும் உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் மாலை 4 மணியளவில் பள்ளிக்குத் திரும்புகிறார். இந்த பணியில் வேலையாட்களும் எனக்கு வேலையில் உதவுகிறார்கள் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் சா தெரிவித்துள்ளார்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 259 மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இருப்பினும், 170 மாணவர்களுக்கு மட்டுமே உணவு அரிசி மற்றும் பணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் 65% மாணவர்களுக்கு மட்டுமே அரசு ரேஷன் வழங்க அனுமதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

170 மாணவர்களிடையே மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது கடினமாக இருந்தது. மாணவர்களின் வருகைக்கு ஏற்ப, நான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். இருந்த போதிலும், மாணவர்களின் எண்ணிக்கை 184-ஆக உயர்ந்தது. பின்னர், எந்தவொரு மாணவரும் பாதிப்பு ஏற்படாதபடி, எனது சொந்த செல்வில் இருந்து 14 மாணவர்களுக்கு ரேஷன் வழங்க முடிவு செய்தேன், என்றும் சா கூறினார்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு கிலோகிராம் அரிசி மற்றும் முட்டை / பழத்திற்கு ஆகியவ்ற்றுடன் 113.6 ரூபாய் ரொக்கம் என 20 நாட்களுக்கு வழங்கப்பட்டது என்றார். இதேபோல், 5 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் முட்டை / பழம் மற்றும் சமையல் செலவுக்காக மூன்று கிலோ அரிசி மற்றும் 158.2 ரூபாய் ரொக்கத்தை வழங்கியுள்ளேன்.

“8-ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வுகளை எழுத உள்ளதால், மார்ச் மாதத்தில் அவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே ரேஷன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு 1.8 கிலோகிராம் அரிசி மற்றும் .92.52 ரூபாய்ரொக்கம் அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.