பீகாரில் 10ம் வகுப்பு விடைத் தாள்களை எடைக்கு போட்டது அம்பலம்…தலைமை ஆசிரியர் கைது

பாட்னா:

பீகாரில் 42 ஆயிரம் 10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 1426 மையங்களில் பிப்ரவரியில் நடந்தது. 17 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். வரும் 26-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பழைய பேப்பர்களோடு சேர்த்து இந்த விடைத்தாள்களையும் எடைக்கு போட்டது தெரியவந்து. இது குறித்து கோபால்கன்ஞ் போலீசார் வழக்குப் பதிவு செய்து பள்ளி தலைமையாசிரியர், அலுவலக உதவியாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.