‘வந்தே மாதரம்’ பாடிய மாணவர்களை தண்டித்த ஆசிரியர்

மிர்சாபூர்:

த்தர பிரதேச மாநிலத்தில், ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய மாணவர்களை தண்டித்த, பள்ளி  தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு துவக்கப் பள்ளியில், காலை பிரார்த்தனையின்போது, கைகளை குவித்து, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என, குரல் எழுப்பிய மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் ஷாகித் பைசல் சரமாரியாக அடித்தார். அதில், இரண்டு மாணவர்களின் தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர், மாவட்ட பள்ளி கல்வித் துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து , மாணவர்களை அடித்து காயப்படுத்திய, பள்ளி தலைமை ஆசிரியர்  ஷாகித் பைசல், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து  பள்ளி தலைமை ஆசிரியர் ஷாகித் பைசல் தெரிவிக்கையில், ”வந்தே மாதரம் பாடலை, மாணவர்கள் ஒழுங்காக பாடாததால் அடித்தேன்; அதை சிலர் தவறாக நினைத்து, புகார் தெரிவித்துவிட்டார்கள்” என்று கூறினார்.