அசத்தலாக குட்டிக்கரனம் அடிக்கும் பள்ளிச் சிறுமி! பிரபல வீராங்கனை பாராட்டு (வைரல் வீடியோ)

ள்ளி முடிந்து வீட்டுக்கு சாலையில் நடந்து செல்லும் சிறுமி ஒருவர் அசத்தலாக குட்டிக்கரனம் ( (somersault)  அடிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சிறுமியின் திறமையைக் கண்ட  ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பிரபல வீராங்கனை சிறுமியின் திறமையை கண்டு வியந்து பாராட்டி உள்ளார்.

சமீப நாட்களாக பள்ளிச்சிறுமி சாலையில் அசத்தலாக குட்டிக்கரனம் அடிக்கும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும்  கடினமான ஜிம்னாஸ்டிக் ஆட்டமான, குட்டிக்கரனம் அடிப்பதை, அந்தச் சிறுமி எளிதாக செய்துள்ள செயல் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

இதை வீடியோவைக் கண்ட ஒலிம்பிக்கில் 5 முறை தங்கம் வென்ற ரோமானிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமானெசி , அந்த சிறுமியின் திறமையை பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோமானெசி ‘This is awesome’ (இது அற்புதம்) என்று தலைப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். மொத்தம் 15 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் முதலில் ஒரு சிறுவன் குட்டிக்கரனம் அடிக்கிறார். அதைத்தொடர்ந்து இந்தச் சிறுமி அனாயசமாக குட்டிக்கரனம் அடிக்கிறார்…