பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..

புதுடெல்லி:
வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது.

எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி திறப்பின்போது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.