சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை (4ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு 6ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக அரசு ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று மேலும் ஒருநாள் நீட்டித்து ஜனவரி 4ந்தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்தபடி  வாக்கு எண்ணும் பணிகள் இதுவரை நிறைவடையாததால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விடுத்துள்ள  செய்திக்குறிப்பில்,  வாக்கு எண்ணிக்கை பணிகள் நீண்ட நேரம் நடைபெற்றுள்ள நிலையில் ஆசிரியர்களால் நாளை பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பு ஜனவரி 6-ம் தேதி, திங்கட்கிழமையன்று திறக்கப்படும் என கூறி உள்ளார்.