சாலையில் கிடந்த ரூ.50ஆயிரத்தை காவல்துறையில் ஒப்படைத்த அரசுபள்ளி சிறுவன்: போலீசார் பாராட்டு

ஈரோடு:

ரோடு அருகே பள்ளிக்கு செல்லும்போது, சாலையில் பணக்கட்டு கிடந்ததை பார்த்த 2வம் வகுப்பு படித்து வரும் சிறுவன், அதை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தான்.  அந்த சிறுவனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா,  அப்ரோஸ்பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முகமது யாஷின். 7 வயதான யாஷின், அருகிலுள்ள அரசு பள்ளியில் 2வது வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை யாஷின் பள்ளிக்கு செல்லும்போது சாலையோரம் பணக்கட்டு ஒன்று கிடப்பதை கண்டான். அதை பத்திரமாக எடுத்துச்சென்று பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள் ளார். இதையறிந்த ஆசிரியர்கள் உடடினயாக அந்த சிறுவனை அழைத்துச் சென்று, அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அந்த சிறுவனக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். பணத்தை தொலைத்தவர்கள் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

பணத்தை பத்திரமாக ஒப்படைத்த மாணவன் யாஷினுக்கு பள்ளியிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.