பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் அரசு மருத்துவமனை ஊழியர் கைது

போக்ஸோ  சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஷேக் ஹபீப்

சென்னை: 

சென்னை பெரம்பூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் அருகே உள்ள பகுதியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி இரவு தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது,  அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவு 2 மணி அளவில் வீடுபுகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட முயன்றபோது, அவரை கொன்றுவிடுவதாக அந்த இளைஞர் மிரட்டி உள்ளார்.

சிறுமியின் அறையில் இருந்து சந்தம் வந்ததை கேட்டு, அருகில் இருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் தாய் எழுந்து வந்ததை தொடர்ந்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து செம்பியம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய  போலீசார், மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த பக்கத்துவீட்டு இளைஞரான ஷேக் ஹபீப் என்பவரை கைது செய்தனர்.

அவர்மீது போக்ஸோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஷேக் ஹபீப் அரசு மருத்துவமனையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.