கொரோனா தொற்றால் நடவடிக்கை: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்

ஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங்  அறிவித்து உள்ளது.

சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கிலும் ஜனவரி மாதமே கொரோனா பரவத்தொடங்கியது. உடனடியாக து சீனாவுடனான எல்லையை ஹாங்காங் அரசு மூடியது. ஊரடங்கு விதிமுறைகளையும் அறிவித்தது.

இதையடுத்து, ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த மே முதல் ஊரடங்கு விதிமுறைகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டன. அதோடு பள்ளிகளும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் சில நாட்களாக அங்கு கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் புதியதாக 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரிக்காத வண்ணம் திறக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்து இருக்கிறது.