இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களும் மூடல்: அமைச்சரவை முடிவு

சிம்லா: இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

கொரோனா தொற்று எதிரொலியாக, மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்க அரசுகள் முடிவு செய்தன.

அதன்படி கல்வி நிலையங்கள் திறக்கப்பட கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில், இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூடுவது என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் வருகிற 26ம் தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி தரப்பட்டு உள்ளது.