தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

தராபாத்

ன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

 

நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கபடது.   கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன.  கிட்டத்தட்ட 6 மாதங்களாக நாடெங்கும் பள்ளிகள் மூடப்பட்டன.   அவ்வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  அதையொட்டி பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றான.   இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.   இம்மாநில அரசுகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளி செல்ல அனுமதி வழங்கி உள்ளன.

அத்துடன் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் எழுத்து பூர்வமான அனுமதிக் கடிதம் கொடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  பள்ளிக்கு ஒரு வேளையில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதி உண்டு.   மாணவர்கள் பேனா, பென்சிலை பகிர்ந்துக் கொள்ளக் கூடாது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வேண்டும் என்னும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.