டெல்லியில் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந் நிலையில், டெல்லி மாநில கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை மாணவர்களுக்கான பள்ளி கூடங்களும் அக்டோபர் 5ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள், கற்றல் நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.