Random image

நாளைய பந்த் : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி

நாளைய முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்துக்கு சென்றுள்ளது.    அதற்காக மத்திய அரசின் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன.   ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புக் கொல்ளவில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.   இந்த் அடைப்புக்கு நாடெங்கும் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.  தமிழக ஆளும் கட்சியான அதிமுக அடைப்புக்கு ஆதரவு அளிக்கவில்லை.

புதுச்சேரி அரசு இந்த முழு அடைப்பை  ஒட்டி மாநிலம் எங்கும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுரை அளித்துள்ளது.   இன்று அடைப்பு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு புதுவை முதல்வர் நாராயணசாமி இதை அறிவித்துள்ளார்