கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடபபட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி இருந்தாலும், பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளது. இதனால் மீண்டும் கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. இதன் காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 15 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பது குறித்து மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அதைத்தொடர்ந்து,  பள்ளிகள் திறப்பு  குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்க மாநில அரசுகளுக்கு  மத்தியஅரசு  சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
 இதையொட்டி அனைத்து மாநிலங்களும் தங்களது கருத்துக்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அளித்திருந்தன. அதன்படி,  மொத்தமுள்ள 36 மாநிலங்களில் தமிழகம் உள்பட 21 மாநிலங் களில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அசாம், மாநிலம் இந்த மாதமே கல்விநிறுவனங்களை திறக்க தயார் என்று தெரிவித்திருந்தது.
ஆந்திர மாநிலமும்  செப்டம்பர் ஐந்தாம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்திலும் இன்றுமுதல் (ஜூலை 22) ஊரடங்கு முழுவதும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால், அங்கு அடுத்த மாதம் கல்வி நிறுவனங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறத.
இந்த நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை, மாணாக்கர்களிடையே  சமூக விலகல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஆலோசகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.