நாளை முதல் பள்ளிகள் செயல்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை:

ஜா புயல் மற்றும் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை முதல் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

கடந்த 15ந்தேதி தமிழக்ததின் பல மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல் காரணமாக  தஞ்சை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டருந்தனர்.

தற்போது நிலமை ஓரளவு சீரடைந்து வரும் நிலையில்,   நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர், மாணவிகளுக்கு நாள் மாலைக்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றும்,  பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிப்பகுதியில் விழுந்துள்ள மரங்கள்  70% அகற்றப் பட்டுள்ளதாகவும், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி