னைத்துலக விண்வெளி நிலையம்( International Space Station (ISS))  என்பது விண்ணிலே தாழ்-புவி சுற்றுப் பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம்.  தொடர்ந்து ஆய்வு செய்யவும், ஏதேனும் பழுதுபார்க்கவும்  எப்போதுமே இரண்டு பேர் அவசியம்.

கிபி  2000 ஆண்டு முதல் இந்த விண்வெளி நிலையத்தில் எப்போதும் இரண்டு விஞ்ஞானிகள் இருந்து வருகிறார்கள். சுழற்சி முறையில் விஞ்ஞானிகள் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அதில் சிலர் தேவை கருதி நீண்டகாலமாக விண்வெ ளி ஆய்வு நிலையத்தில் ஆய்வு செய்வார்கள்

இந்நிலையில்  கடந்த மார்ச் 14ம் தேதி விண்வெளி சென்ற  கிறிஸ்டினோ கோச் 2020 பிப்ரவரி விண்வெளியில் உள்ள  ஆய்வு நிலையத்தில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தங்கினால் விண்வௌியில் அதிக நாட்கள் தங்கிய பெண்மணி என்ற சாதனையை செய்வார்

40 வயதான கோச் அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானியுடன் மார்ச் 14ம் தேதி விண்வெ ளி நிலையத்திற்கு வந்தார் 6 மாத பயணமாக வந்த அவரின் பயணத்திட்டம் பிப்ரிவரி 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நீண்ட நேரம் சாத்தியம் என்று எனக்கு தெரியும், அது உண்மையில் ஒரு கனவு என்றும் திரு.கோச் தெரிவித்தார்.

ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து ஆரம்பித்த இத்திட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, ஜப்பான்,  கனடா , பிரேசில் மற்றும் இத்தாலிய நிறுவனமும் பங்களிக்கின்றன

ஆனால் 2020ல் இத்திட்டத்தில் இருந்து  வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது

-செல்வமுரளி