டில்லி

முட்டை சைவமா அல்லது அசைவமா என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை அளித்துள்ளனர்.

வெகுநாட்களாக விவாதிக்கப்படும் பல விஷயங்களில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பதும் ஒன்று.   அது உயிருள்ள ஒரு பறவையிடம் இருந்து வருவதால் அது அசைவம் எனவே பலரும் கூறுகின்றனர்.  இது குறித்து டில்லியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள், “முட்டையில் மூன்று பகுதிகள் உள்ளது.  அவைகள் முட்டை ஓடு,  மஞ்சள் கரு, மற்றும் வெள்ளைக் கரு.  வெள்ளைக் கரு என்பது வெறும் ப்ரோட்டின் மட்டுமே.   மஞ்சள் கரு என்பது சில ப்ரோட்டின்கள், கொழுப்புச் சத்துக்கள் அடங்கியவை ஆகும்.    அவைகளில் உயிர் அணுக்கள் இல்லை.   மக்கள் தினமும் சாப்பிடும் முட்டை வகைகளில் உயிர் அணுக்கள் கிடையாது.

ஒரு கோழுக்கு வயது ஆறு மாதம் ஆனால் அந்தக் கோழி ஒரு நாளைக்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை நாட்களுக்கு ஒரு முறையோ முட்டை இடும்.  இவ்வாறு இடப்படும் முட்டை சேவலுடன் சேராமலே கிடைக்கும்.  இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு பொறிக்க முடியாது.  தற்போது சந்தையில் கிடைக்கும் அனத்து முட்டைகளுமே இது போன்ற முட்டைகள் தான் எனவே முட்டை என்பது சைவ உணவு” என அறிவித்துள்ளனர்.