உருகும் ஆர்டிக் கண்டத்தை பாதுகாக்க விஞ்ஞானிகள் புதிய யோசனை"
உருகும் ஆர்டிக் கண்டத்தை பாதுகாக்க விஞ்ஞானிகள் புதிய யோசனை”

பனிப்பிரதேசமான ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயருவதுடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உலகம் முழுவதும் பருவநிலையில் மாற்றம் ஏற்படலாமென ஆர்டிக் பகுதியை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ஆர்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் 20 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். பனிப்பிரதேசத்தில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பனி குறைவதுடன் அதிக அளவில் வெப்பம் உறிஞ்சப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்டிக்கில் பனி உருகி வருவதால் அதன் அருகே வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலக தட்பவெப்பம் அதிகரிக்க முக்கியக் காரணமான கார்பன் டை ஆக்ஸைட் (CO2 ) வெளியேற்றத்தை குறைக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை.
இப்படியே தொடர்ந்தால், அடுத்த இருபதாண்டுகளில் ஆர்டிக் கோடை கடல் பனி பெருமளவில் இழந்து விடுவோம்.
அது அளவிடமுடியாத பேரிழப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

ஏற்கனவே அரிதாகிப் போன போலார் கரடிகள் மற்றும் ஆர்க்டிக் மீன் போன்ற விலங்கினங்கள் எண்ணிக்கை குறுகி அவற்றை முற்றிலும் இழக்க நேரிடும்.
எல்லாவற்றைவிட முக்கியமாய், இந்தப் பனி தான் பூமியிலிருந்து மீண்டும் சூரிய கதிர்வீச்சை பிரதிபலித்து விண்வெளிக்கு திருப்பி விடும் பனியைச் செய்து வருகின்றது. இந்தப் பனியை இழந்தால், இந்த இயக்கம் தடைப்படும். பூமி வெப்பம் அடையும். பேரழிவு ஏற்படும்.

எனவே , இந்தப் பனியை சிதையாமல் காப்பது முக்கியக் கடமையாகும்.
பனி கரையாமல் காக்க, இதற்கு முன்னர் இந்த ஆர்டிக் பகுதியில், செயற்கையாக மேகங்கள் உருவாக்கிச் சூரியக்க்கதிர் வீச்சை மட்டுப்படுத்துவது. அல்லது, பனி மேற்பரப்பில், பிரகாசமான ஏரோசால் துகள்களைத் தூவி செயற்கை வெண்மையை நிலைக்கவைத்து சூரிய கதிர்வீச்சு பிரதிபலிக்க வைப்பது போன்றவை நாசாவால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
வட துருவம் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் (36 ° F) வரை அதிகரித்து கடந்த ஆண்டு சராசரியை விட அதிக வெப்பத்தை சந்தித்த்தால், ஆர்க்டிக் பகுதியினை ஆபத்து சூழ்ந்துள்ளது.

ஆர்வக்கோளாரான ஒரு உத்தியை விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர். ஆர்டிக் மேற்பரப்பின் மீது காற்றுசக்தியுடன் இயக்கப்படும் பம்புகள் கிட்டத்தட்ட 10 மில்லியன் எண்ணிக்கையில் நிறுவிக் குழாய் வழியாய் கடல் நீர் தெளித்து மீண்டும் பனி உருவாக்குவது தான் அது.

முன்னணி ஆராய்ச்சியாளர் மற்றும் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல், ஸ்டீவன் டெஸ்ச்(Steven Desch), “தற்போது நாம் உடனடியாய்ச் செய்ய வேண்டியது படிம எரிபொருட்களான பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதை அடியோடு நிறுத்துவதாகும்” எனக் கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

“இது ஒரு நல்ல யோசனை தான், ஆனால், இது மட்டும் போதாது. ஆர்ட்டிக் பனியைக் காக்க மேலும் பல செய்யவேண்டியுள்ளது.
உருகும் பனியினை மீண்டும் திடமாக்கும் திட்ட்த்திற்கு என்ன செலவாகும் என்பதை ஒரு நாளிதழ் கணக்கிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

பத்து மில்லியன் பம்புகள் கொண்டு உப்புநீர் தெளிப்பதன் மூலம் ஒரு மீட்டர் ஆழம் கொண்ட பனியினை செயற்கையாய் ஏற்படுத்தலாம். இந்த அடுக்கு, வேகமாக அதிகரித்து வெப்பநிலை இருந்து பனியினை பாதுகாக்க உதவும் என்று மதிப்பிட்டுள்ளது.

“தடிமனான பனி , அதன் கீழ் இருக்கும் பனியினை, நீண்ட நாட்களுக்கு காக்கும்” என்று அவர் கூறுகிறார். “இவ்வாறு செய்வதன்மூலம் கோடையில் எல்லாப் பனியும் கரைந்துவிடாமல் காக்கும்.
இந்த யோசனையின் படி ஆர்டிக் பகுதியில், மில்லியன் கணக்கான காற்றினால் இயக்கப்படும் பம்ப் நிறுவி, பனிக்கட்டியின் மேற்பரப்பில் கடல் நீர் தெளித்து செயற்கையாய் ஒரு கூடுதல் தடிமனான பனி அடுக்கை உருவாக்க முடியும்.
ஒரு கணக்கின்படி, தண்ணீர் வினாடிக்கு 7.5 கிலோ (16.5 பவுண்டுகள்), அல்லது ஒரு மணி நேரத்திற்கு 27 மெட்ரிக் டன் தண்ணீர் தெளித்தால் 1 மீட்டர் ஆழத்திற்கு ஐஸ் உருவாகும். ஒரு மீட்டர் ஐஸ் படரச்செய்வது 17 ஆண்டுகள் முந்தைய நிலைக்கு ஆர்ட்டிக் கண்டத்தைத் திருப்பும்.

ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் 107 சதுர கிமீ பரப்பளவு கொண்டது [3.8 மில்லியன் miles2]. காற்றினால் இயக்கப்படும் பம்ப்கள் மற்றும் குழாய்கள் 10 சதவீதம் பகுதியில் நிறுவப்பட வேண்டுமெனில், 10 மில்லியன் காற்றினால் இயக்கப்படும் குழாய்கள் தேவை இருக்கிறது. ஆக, முழு ஆர்டிக் பகுதிக்குச் சுமார் 100 மில்லியன் பம்ப்கள் தேவைப்படும்.

ஒரு பம்ப் செய்யச் சுமார் 10 டன் [22,046 பவுண்டுகள்] இரும்பு (ஸ்டீல்) தேவை.
பத்து மில்லியன் பம்ப் செய்ய 100 மில்லியன் டன் இரும்பு ஆண்டொன்றிற்கு தேவை. அமெரிக்கா ஆண்டிற்கு 80 மில்லியன் டன் இரும்பு தயாரிக்கின்றது. உலகமுழுவதும் மொத்தமாக 1600 மில்லியன் இரும்பு (ஆண்டொன்றிற்கு) தயாரிக்கப்படுகின்றது.

இயற்கைக்கு எதிரான திட்டங்களால், பூமி பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. பூமியைக் காப்பதற்காக எல்லா வகையிலும் பங்களிப்பு செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகின்றது.
நமது நாட்டில், கடலில் சிந்திய எண்ணையை வாளியில் அள்ளும் நிலையில், ஆர்ட்டிக் பகுதியில், இயற்கையை காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது