சூரியனைப் பிடித்து கூண்டில் அடைத்த விஞ்ஞானிகள்!

 

நெட்டிசன்:

நியான்டர் செல்வன் (Neander Selvan)  அவர்களின் முகநூல் பதிவு:

சூரியனை பிடிச்சு கூண்டில் அடைக்க முடியுமா என வீரவசனம் பேசுவோம்

ஆனால் நிஜமாவே சூரியனை பிடித்து பெட்டியில் அடைத்து வைத்துள்ளர்கள் விஞ்ஞானிகள்

இங்கல்லா, அமெரிக்காவில்

15 ஆண்டுகளுக்கு முன்பு சூரியக்காற்றான சோலார் விண்டை கைப்பற்ற விண்வெளிக்கு ஒரு ராக்கட்டை அனுப்பினார்கள்.

அது தயாராக காத்திருந்தது

சூரியகாற்று செகண்டுக்கு 750 கிமி வேகத்தில் பயணிக்கும். அது வரும் வழியை கணக்கிட்டு ராக்கட்டை நிறுத்தி, அதில் சிலிகான், தங்கம், வெள்ளி அடங்கிய வலைகுடுவைகளை தயார் செய்து சூரியகாற்றை அதில் பிடித்தார்கள். பிடித்து குடுவைகளில் அடைத்தார்கள். டிசம்பர் 2001 முதல் ஏப்ரல் 2004 வரை அந்த ராக்கட் விண்வெளியில் நின்று தவம் செய்து கிடைத்த சூரியகாற்றை எல்லாம் குடுவையில் அடைத்தது.

அதன்பின் நாலுமாத பயணம் செய்து பூமியை நெருங்கியது. ஒரு காப்ஸ்யூலில் பாராசூட்டை கட்டி, அதில் அந்த குடுவைகளை அடைத்து பூமியை நோக்கி இறக்கியது ஜெனிசிஸ் ராக்கட்

ஆனால் என்ன கொடுமை…பூமியை தொடுமுன் பாரசூட் கழண்டுகொள்ள காப்ஸ்யூல் பூமியில் விழுந் நொறுங்கியது

கண்ணீர் மல்க விஞ்ஞானிகள் அழுதபடி அந்த காப்ஸ்யூலை நோக்கி சென்றார்கள். எதாவது மிஞ்சுமா என பார்க்க.

ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக சில குடுவைகள் எந்த ஆபத்தும் இன்றி அப்படியே தப்பி பிழைத்திருந்தன. அதனுள்ளே பத்திரமாக சூரியகாற்று

அதில் ஒரே ஒரு துண்டை எடுத்து ஆராய்ந்தார்கள். அதில் தெரியவந்தவை

சூரியதுகள்கள் என ஒன்று இருப்பதாக நம்பபட்டது. அப்படி எதுவும் இல்லை என்று கண்டறிந்தார்கள்.

சூரியனில் ஆக்சிஜன் 16 எனும் ஐஸோடோப் பூமியை விட மிக அதிக அளவில் உள்ளது. சூரியனும், பூமியும் ஒரே நெபுலாவில் (விண்மேகம்) இருந்து வந்தவை என்பதால் பூமியை விட சூரியனில் எப்படி இந்த ஐசோடோப் அதிகமாக உள்ளது என புரியாமல் குழம்பியுள்ளனர்.

மற்றபடி மற்ற சூரிய காற்று பகுதிகளை ஆராயாமல் அப்படியே பத்திரமாக வைத்துள்ளனர்.

ஏனெனில் இன்னும் தொழில்நுட்பம் முன்னேறியபின் ஆய்வை தொடர்ந்தால் மேலும் புதிதாக பலவிசயங்களை கண்டுபிடிக்கலாம் என

(புகைப்படத்தில் யூடா பாலைவனத்தில் விழுந்து நொறுங்கிய காப்ஸ்யூல்)