லண்டன்:

சூரியனின் காந்தசக்தி செயல்பாடு காரணமாக சிறு பனியுகம் ஏற்பட்டு அதன் மூலம் பிரிட்டனில் உள்ள  பெரிய நதிகள் அனைத்தும் அடுத்த 20 ஆண்டுகளில் உறைந்து போகும் என்று பல்லைக்கழக ஆராய்ச்சி  மூலம் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் ரஷ்யா பல்லைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்த அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளது. சூரியனில் காந்தசக்தி செயல்பாடு காரணமாக 2021ம் ஆண்டு முதல் அங்கு தட்ப  வெட்ப நிலை குறைய தொடங்கும். இது 2030ம் ஆண்டி பிரிட்டனில் உள்ள பெரிய நதிகளை உறைய  செய்யும் அபாயம் உள்ளது.

நார்தும்பிரியா பல்கலைக்கழக கணித பேராசிரியர் வேலன்டினா சர்கோவா தலைமையிலான குழுவினர்     மாஸ்கோ முதல் சூரியனில் இருந்து உற்பத்தியாகும் இரண்டு காந்த அலைகளின் நகர் கண்காணித்தனர். இது 3 கிரக சுழற்சிகளில் 2021ம் ஆண்டு முதல் காந்த அலைகளின் சக்தியை படிப்படியாக குறைத்து, 33  ஆண்டுகளில் முற்றிலுமாக குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் காந்தசக்தி குறைவதன் மூலம் பூமியில் குளிர்ந்த நிலை ஏற்படுத்தும் என்று வரலாற்று  ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1645ம் ஆண்டு முதல் 1715ம் ஆண்டு வரையிலான         காலங்களில ஏற்பட்ட பனி உறைவோடு தற்போதைய ஆராய்ச்சி 97 சதவீதம் ஒத்துப் போகிறது என்று     பேராசிரியர் சர்கோவா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ எங்களது கணித ஆராய்ச்சியின் கணிப்பை ஆதாரமாக கொள்ளக் கூடாது .  இந்த முறை பனி உறைவு அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலக வெப்பமயாததலால் இது குறை ந்தபட்சமாக இருக்காது. பெரிய அளவில் தாக்கம் இருப்பதற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணமாக  இருக்கும். மனிதன் ஏற்படுத்திய மாசு பாதிப்பால்  பூமிக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டுபிடிக்கவே  30  ஆண்டுகள் ஆகியது’’ என்றார்.