Random image

நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து: 121 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றம்

எடின்பர்க்: பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது.

நாடு முழுவதும் பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் மசோதாவை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில், எம்பி மோனிகா லெனான் முன்மொழிந்தார். இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விரிவாக விவாதிக்கப்பட்ட இந்த மசோதா 121 வாக்குகளுடன் ஒருமனதாக அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் பெண்களுக்கு சுகாதார தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெயரை ஸ்காட்லாந்து பெற்று இருக்கிறது.

இந்த புதிய சட்டம், ஸ்காட்லாந்தில் உள்ள பல பெண்கள் உரிமை குழுக்கள், அரசியல் பிரமுகர்களால் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுகாதாரப் பொருள்கள் இலவசமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.