ஆஸ்திரேலியாவின் 30வது புதிய பிரதமராக நிதி அமைச்சர் ஸ்காட் மோரிசன் தேர்வு

மெல்போர்ன்:
 
ஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வாகியுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின் 30வது பிரதமராவார்.

ஆஸ்திரேலியாவில லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது லிபரல் கட்சியை சேர்ந்த  மால்கோம் டர்ன்புல் ( Malcolm Turnbul) பிரதமராக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் லிபரல் கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  மால்கோம் டர்ன்புல்லை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. ,தில்  பெரும்பான்மை ஆதரவை இழந்தார் டர்ன்புல்.

இதையடுத்து, பிரதமர் பதவிக்கு 3 பேர் களமிறங்கினர். முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப், தற்போதய நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கான தேர்வில் இருந்தனர். இவர்களில் ஒருவரை ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்க லிபரல் கட்சி வாக்கெடுப்பு நடத்தியது. இதில், நிதி அமைச்சர் ஸ்காட் மோரிசன் வெற்றிபெற்றார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஸ்காட் மோரிசன்  விரைவில் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய பிரதமரான டர்ன்புல் பதவி விலகுகிறார். அத்துடன் தனது  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் 6 பேர் மாறியிருப்பது  குறிப்பிடத்தக்கது.